'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் சி.கே.நந்தகோபாலன் சிறப்பு நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "ஒரு குழந்தை பிறக்கிறது; இந்த குழந்தை தாய்ப்பால் சாப்பிடும் போது லாக்சோஸ் உள்ளே போகிறது. அது ஒரு சர்க்கரை. சில நாட்களுக்கு பிறகுதான் குழந்தைக்கு சர்க்கரை தண்ணீர் கொடுக்க ஆரம்பிப்பார்கள். தண்ணீரில் சர்க்கரை இல்லாமல் இருந்தால் குழந்தை குடிக்காது. அதனால் தண்ணீரில் சிறிது சர்க்கரைச் சேர்த்துக் கொடுப்பார்கள். பிறந்த குழந்தை சர்க்கரையை பிறந்த பருவத்திலே அனுபவிக்கிறது. திடீரென்று 40 வயதில் சர்க்கரையை பிளாக் செய்தால், உன்னுடைய மாடன் சைனஸில் இன்னும் உன்னுடைய செல்ப் பிகேவியரை நீ படிக்கவே இல்லை. அது இயங்க ஆரம்பிக்கும்.
35 வயது வரை ஒருவர் காடை, கவுதாரி, கொக்கு நாரை, நத்தை, ஆமை, மான், ஆடு, மாடு எல்லாம் சாப்பிடுவார். 35 வயதில் அவருக்கு ஞானோதயம் வரும். அப்போது அவர் ஒரு சாமியாரைப் பார்ப்பார். சாமியார் நீ வா நான் உன்னை கடவுளிடம் அழைத்துச் செல்கிறேன் என்பார். அப்படியே அசைவ உணவைச் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். அந்த நாளில் இருந்து அவர் பரிசுத்தமாகிவிட்டார். உடனே அவரின் உடல் என்னவாகுமென்றால், மூன்று அல்லது ஐந்து வருடங்களில் நலிவடைந்துப் போகிவிடும். அந்த மாமிச உணவில் இருந்து கிடைக்கக் கூடிய புரதம் அவரது உடலை நம்பி இருந்தது.
காளான் எல்லாம் ஃபங்கஸ்தான். அதை சாப்பிடக் கூடாது. நிறைய உணவுக் கொடுத்து இருக்கிறான் இறைவன். காளானில் போதைக் கொடுக்கக் கூடிய காளான் இருக்கிறது. மனிதனுக்கு மிக மிக ஏற்படக் கூடியது போதை ஒன்று தான். மனிதன் நினைவு நிலையை விரும்ப மாட்டார்கள். ஏனெனன்றால் காதல் தோல்வி.
சர்க்கரையில் ஒரு சில ஃபங்கஸ் இருக்கிறது. அது ரத்தத்தில் கலந்துவிட்டால் அவர்களுக்கு சர்க்கரை வேண்டும். அது அடிக்கடி அவரை சர்க்கரையைச் சாப்பிடத் தூண்டும். ஆல்ஃபா குளூக்கோஸ் (Alpha Glucose) மற்றும் பீடா ஃப்ரூடோஸ் (Beta Fructose) சேர்ந்தது தான் சர்க்கரை. குளூக்கோஸ் 100% இனிப்பு என்றால், ஃப்ரூடோஸ் 180% இனிப்பு. விஞ்ஞான உலகம் ஃப்ரூடோஸ் என்பது உடலுக்கு தகுதியானது இல்லை என்று நிரூபித்த பிறகும், இந்த ஹை ஃப்ரூடோஸ் கான் சிரப்பை உலகளவில் வியாபாரம் செய்கிறார்கள். ஏனென்றால், ஃப்ரூடோஸ் கான் மிக மலிவானது.
ஃப்ரூடோஸ் சாப்பிடக் கூடாது என்று ஒருபுறம் பயோ கெமிக்கல்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கத்துகிறார்கள். ஹை ஃப்ரூடோஸ் கான் சிரப்பை ஒருபுறம் விற்பனை செய்கிறார்கள். இதில் ஒளிக்கோ ஃப்ரூடோஸ் என்று ஒன்று உள்ளது. இது கரும்பு முழுவதும் அரைத்த பிறகு கிடைக்கும் சக்கையில் உள்ளது. அதை எடுத்து திரவ நிலையில் விற்கிறார்கள். இதன் விலை மிகவும் மலிவானது என்பதால், அதை பேக்கரி வைத்திருப்பவர்கள் வாங்கி கேக் தயார் செய்து வருகிறார். சர்க்கரைக்கும், சர்க்கரை வியாதிக்கும் சம்மந்தம் கிடையாது". இவ்வாறு மருத்துவர் தெரிவித்தார்.