இதுவரை கூகுள் அசிஸ்டென்ட்டிடம் சாட் (chat) செய்திருப்போம். ஆனால் இனி நேரடியாகவே அவற்றுடன் உரையாடலாம். அவை நாம் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும். அதன்மூலம் நாம் பலவற்றைத் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக ஆர்டர் புக் செய்வது முதலான அனைத்தையும் புக் செய்யலாம்.
கூகுளின் முதன்மை செயலாளர் சுந்தர்பிச்சை நேற்று நடந்த அறிமுக விழாவில் 'டெமோ' (செய்முறை விளக்கம்) காட்டினார். அதில் முக்கியமானது கூகுளே சலூனில் வருகையை புக் (booking) செய்தது. கூகுளிடம் பேசுவதென்றால் முறையான ஆங்கிலத்தில் தெளிவாகப் பேச வேண்டுமென்ற பயமெல்லாம் இல்லை. வார்த்தைகளிடையே நாம் பயன்படுத்தும் நிரப்பு சொற்களான (filling words) mmm, er, hmm போன்றவற்றையும் புரிந்துகொள்கிறது. இதனால் பேசுவது எளிமையாகிறது. டுப்லெக்ஸ் (duplex) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் வழக்கமான கம்ப்யூட்டர் வாய்ஸ் போன்று இல்லாமல், இன்னொரு மனிதரிடமே நேரடியாகப் பேசுவது போன்று இருக்கும்.
இது ஏஐ(AI- artificial intelligence) மூலம் இயங்குகிறது. ஏற்கனவே ஃபேஸ்புக்கின் ஏஐக்கள் தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக்கொண்டது. பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. அதனால் இதை மிகுந்த கட்டுப்பாடுகளுடனும், பாதுகாப்புடனும் இயக்கவேண்டும்.
சிங்க்ள்ஸ்க்கு இதுவரை கம்பெனி கொடுத்துவந்த நட்டாஷாவை இது ஓவர்டேக் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் இதைப்பயன்படுத்தி அதற்கும் மேற்பட்ட நல்ல விஷயங்களையும் செய்யலாம். எதையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் முன்னேற்றம்தான்...