Skip to main content

வேற்று கிரகத்துக்கு மனிதன் சென்று வாழ முடியுமா? நோபல் பரிசு வென்றவர் கூறுவது என்ன?

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

நாம் வாழும் சூரிய மண்டலமும், இதில் உள்ள கோள்களும், நமது சூரிய மண்டலத்தைப் போன்ற லட்சக்கணக்கான சூரிய மண்டலங்களை உள்ளடக்கிய பிரபஞ்சமும் வியப்பை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

 

நமது பூமி ஒருநாள் அழிந்துவிடும். ஓசோன் ஓட்டை விரிவடைந்து பூமி வெப்பமயமாகி, வறண்டுவிடும். சூரியனின் ஆற்றல் குறைந்து ஈர்ப்பு விசை வேறுபாடு காரணமாக நமது கோள்கள் அனைத்தும் சூரியனுடன் இணைந்து கருந்துளையாகிவிடும் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

 

அதற்காகத்தான் மனிதர்கள் வாழக்கூடிய வகையிலான வேற்றுக் கிரகத்தை மனிதன் தேடிக்கொண்டிருக்கிறான் என்கிறார்கள். ஆனால், அது சாத்தியமே இல்லை என்கிறார் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பங்கிட்டுக்கொண்ட மைக்கேல் மேயர். நமக்கு மிக அருகில் உள்ள வேற்றுக்கிரகத்துக்கு செல்லவே சில டஜன் ஒளி ஆண்டுகள் ஆகும்.

 

ஒளியின் வேகம் வினாடிக்கு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் என்கிறார்கள். அப்படியானால் ஒரு ஆண்டுக்கு ஒளி பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். பூமியிலிருந்து சூரியனின் தூரம் 15 கோடி கிலோ மீட்டர்கள். பூமியிலிருந்து வியாழனின் தூரம் 64கோடி கிலோமீட்டர்கள்.

Can man go to extraterrestrial life?  What does the Nobel laureate say?

நிலவுக்கே இதுவரை எளிதாக மனிதர்கள் சென்றுவர வழி காணவில்லை. செவ்வாய் கோளுக்கு மனிதர்களை அனுப்ப அடுத்து 50 ஆண்டுகள் ஆகலாம். வியாழனின் சுற்றுப்பாதைக்கு விண்கலத்தை அனுப்ப அடுத்த சில நூற்றாண்டுகள் ஆகலாம். அப்படி இருக்கும்போது, நமது சூரியக் குடும்பத்துக்கு வெகு அருகில் உள்ள இன்னொரு நட்சத்திரத்தை அடைய வியானைப் போல 70 ஆயிரம் மடங்கு தூரத்தை கடக்க வேண்டும். அது இப்போதைக்கு முடியுமா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்கிறார் மைக்கேல் மேயர்.

 

1995 ஆம் ஆண்டு பிரான்ஸில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள தொலைநோக்கி வழியாக பூமிக்கு மிக அருகில் உள்ள சூரியனையும், அதைச் சுற்றும் வேற்றுக் கிரகத்தையும் கண்டுபிடித்தவர் மைக்கேல் மேயர். அதன்பிறகு சுமார் 4 ஆயிரம் வேற்றுக் கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

ஆனால், வேற்றுக்கிரகத்துக்கு சென்று மனிதர்கள் வாழும் நினைப்பு ஒருபோதும் நடக்காது என்கிறார் மேயர். அதேசமயம், நாம் வாழும் பூமி அற்புதமானது. அதை நாம் பாதுகாப்பாக வைத்திருந்தால் நீண்டகாலம் வாழமுடியும் என்கிறார்.