Skip to main content

வருங்காலத்தை காக்குமா இந்த பாட்டில்கள்???

Published on 26/05/2018 | Edited on 26/05/2018

வருங்காலம் நிலம் முழுவதும் பிளாஸ்டிக்கால் சூழப்பட்டு இருக்கும் என்று ஒரு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு ஏற்றது போலவே எங்கும் எதிலும் மனிதர்களின் பயன்பாட்டில் பிளாஸ்டிக் என்ற ஒன்று இன்றிமையாத பொருட்களாக உள்ளது. பிளாஸ்டிக்கை தடை செய்வோம், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம் என்று வெவ்வேறு விதமாக அரசாங்கத்தால் பிளாஸ்டிக்கை பற்றின விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. 
 

plastic pollution

 

 

 

பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் துணிப்பைகளை பயன்படுத்துங்கள். முடிந்தவரை பிளாஸ்டிக்கை தவிர்த்துவிடுங்கள் என்று சமூக ஆர்வலர்களால் சொல்லப்பட்டு வந்தது, வருகிறது. இருந்தாலும் உலகளவில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு பல சதவீதங்கள் உயர்ந்திருக்கிறது. தண்ணீர் தாகம் எடுக்கிறதென்றால், கடைகளில் குடிக்க தண்ணீர் வாங்குவீர்கள். அந்த தண்ணீர் அடைக்கப்பட்டிருப்பது பிளாஸ்டிக் பாட்டிலில்தான். பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு என்பது இன்றிமையாத ஒன்றாகவே தற்போது இருக்கிறது.

 

 

இதை யாராலும் தடுக்க இயலாது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் தற்போது சூஸ் 2 என்ற ஒரு நிறுவனம் காகிதத்தால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டிலை கண்டுபிடித்துள்ளது. பிளாஸ்டிக் வேண்டாம் என்று ஏன் சொல்கிறார்கள் என்றால், அது மக்காது. அப்படி மக்கினாலும் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டால் பிளாஸ்டிக் உலகில் இருக்கும் அனைத்து பகுதியையும் ஆட்கொண்டு நிரம்பிவிடும். பின் நீர் சூழ் உலகானது, பிளாஸ்டிக் சூழ் உலகாக மாறிவிடும்.
 

bottle

 

 

 

சூஸ் 2 வாட்டர் என்ற இந்த பாட்டிலை ஜேம்ஸ் லாங்கிராப்ட் என்ற ஸ்காட்டிஷ் பேராசிரியர் உருவாக்கியுள்ளார். இந்த பாட்டிலை நிலத்தில் போட்டாலும், கடலில் போட்டாலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களிலேயே மக்கிவிடும். பாட்டிலின் வெளித்தோற்றம் தடிமனான காகிதத்திலும், மூடி தகரத்திலும், நீரை காகித பாட்டிலுக்குள் அடைத்து வைக்க 'வாட்டர் ப்ரூப்' அடுக்கும் இதில் சேர்த்துள்ளார். 8 பில்லியன் டன் பிளாஸ்டிக் பாட்டில்களின் குப்பைகள் பெருங்கடலில் கொட்டப்படுகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. இந்த பாட்டில்களை மக்கள் வியாபாரத்துக்கு கொண்டுவரவேண்டும் என்றால், தொழிற்சாலைகளை ஏற்படுத்தி, வணிக சந்தையில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதற்காக இதை உருவாக்கியவர் பொது மக்களிடம் நிதி திரட்டிக்கொண்டு இருக்கிறார்...