Skip to main content

தோல்வி பயத்தால் பாஜக செய்யும் முயற்சிகள்!!!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

இந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் வித்தியாசமானதாக உள்ளது, யார் வெல்வார்கள் என்று சிறு கணிப்புக்கூட கணிக்க முடியவில்லை என பல அரசியல் அறிஞர்களும், விமர்சகர்களும் கூறுகின்றனர்.
 

modi amit shah


இந்தத்தேர்தல் அந்தளவிற்கு இருக்கிறது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் பாஜகவிற்கு வாய்ப்பு என்பது மிகமிக குறைவானது என்பதை மட்டும் நாம் இப்போது கூறலாம்.
 

வட இந்தியாவில் என்ன நிலை என்பது அடுத்தக்கட்ட நாடாளுமன்ற தேர்தல்களைப் பொறுத்துதான் இருக்கிறது. எப்படியும் வென்றாக வேண்டும் என்ற முடிவில் பாஜக இருக்கிறது, அதற்காக பாஜக பல விஷயங்களை கையில் எடுத்திருக்கிறது. நான்கரை ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத பிரதமர் நரேந்திரமோடி இப்போது வளைத்துக்கட்டி பேட்டி கொடுக்கிறார். பி.எம்.மோடி திரைப்படத்தை வெளிக்கொண்டுவர முயற்சி செய்கின்றனர். இராணுவ நடவடிக்கைகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். 


இவைமட்டுமில்லாமல், ஒவ்வொரு தொகுதியிலும் அப்பகுதியில் பிரபலமாக இருக்கும் வேட்பாளர்களை களமிறக்குகின்றனர். இவையனைத்திற்கும் மேலாக தேர்தல் நடைமுறை விதிகளையும் மீறியுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இப்படியான செயல்கள் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பார்க்கிறது எனவும் கூறுகின்றனர். இப்படி பல முயற்சிகள் எடுத்தாலும் இந்தத் தேர்தல் என்பது மாநிலக் கட்சிகளின் கையில்தான் இருக்கிறது, மாநிலக் கட்சிகள்தான் பெரும்பாலான இடங்களில் ஆதிக்கம் செலுத்தும் என்பதே நிதர்சனமான உண்மை.