ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து ஆகுமா? மாநில அரசுக்கு ஆபத்தா?
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

பணப்பட்டுவாடா செய்ததாக ரூ.3 லட்சத்தை பிடித்து கொடுத்த தங்கதமிழ்ச்செல்வன்
அதேசமயம், பிரச்சாரம் என்ற பெயரில் பணப்பட்டுவாடாவும் வேகமெடுத்துள்ளது. ஒரு வாக்கிற்கு 6 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. ஏற்கெனவே கொடுத்தவர்கள், தங்கள் பகுதிக்குள் அடுத்த கட்சிக்காரர்கள் பணம் கொடுக்காத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தினகரன் அணியினர் பல இடங்களில் தடுத்து பணத்தை பறிமுதல் செய்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தொகுதியில் அடுத்தடுத்த நடக்கும் நிலையில் தேர்தல் செலவினப் பார்வையாளர் தொகுதிக்கு வந்துள்ளார்.

இன்றைய நிலை நீடித்தால் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா பகிரங்கமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தமுறையைப் போல இந்தமுறையும் தேர்தலை ரத்துசெய்ய வைக்கவே அதிமுகவினர் பகிரங்கமாக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படுகிறது.
பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கத் தவறிவிட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

அடுத்த இரண்டு நாட்களில் ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக அதிரடி முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும் தேர்தல் ரத்து செய்யப்படும் நிலை உருவானால், மாநில அரசுக்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
-ஆதனூர் சோழன்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

பணப்பட்டுவாடா செய்ததாக ரூ.3 லட்சத்தை பிடித்து கொடுத்த தங்கதமிழ்ச்செல்வன்
அதேசமயம், பிரச்சாரம் என்ற பெயரில் பணப்பட்டுவாடாவும் வேகமெடுத்துள்ளது. ஒரு வாக்கிற்கு 6 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. ஏற்கெனவே கொடுத்தவர்கள், தங்கள் பகுதிக்குள் அடுத்த கட்சிக்காரர்கள் பணம் கொடுக்காத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தினகரன் அணியினர் பல இடங்களில் தடுத்து பணத்தை பறிமுதல் செய்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தொகுதியில் அடுத்தடுத்த நடக்கும் நிலையில் தேர்தல் செலவினப் பார்வையாளர் தொகுதிக்கு வந்துள்ளார்.

ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு
இதனிடையே, இன்று அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தேர்தல் ஆணையத்துக்கு பரபரப்பான புகார் ஒன்றை அனுப்பியிருக்கிறார். தொகுதியில் உள்ள குக்கர் கடையில் இருந்து ஒன்னரைக் கோடி ரூபாய்க்கு குக்கர் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். தினகரனின் செலவுகணக்கில் இதை எழுதி அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மதுசூதனன் கேட்டிருக்கிறார்.இன்றைய நிலை நீடித்தால் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா பகிரங்கமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தமுறையைப் போல இந்தமுறையும் தேர்தலை ரத்துசெய்ய வைக்கவே அதிமுகவினர் பகிரங்கமாக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படுகிறது.
பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கத் தவறிவிட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் போராட்டம்