மக்களின் குடியரசுத் தலைவர் என்றும், இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்றும் மக்களால் போற்றப்பெற்றவர், ஏ.பி.ஜெ அப்துல் கலாம். இந்தியாவின் வருங்கால செல்வங்களாக இருக்கின்ற இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் இவர் ஒரு முன்மாதிரியாகவே இருந்தார். நாட்டின் குடியரசு தலைவர், அக்னி என்கிற சக்திவாய்ந்த ஏவுகணையை கண்டுபிடித்ததைவிட ஆசிரியராக இருப்பதுதான் பெருமை என்று கருதினார். நான் மறையும் தருவாயில்கூட மாணவர்களுக்கு ஏதேனும் கற்றுத்தர வேண்டும் என்று சொல்லியவர். 2020 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும், அதுவும் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது என்று சொல்லியவர். 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி மறைந்தார்.
![apj](http://image.nakkheeran.in/cdn/farfuture/cMC9R2zLP_rmt5UPjD-A1ZTlYRqWwOguj_1fqxWx0RI/1533347640/sites/default/files/inline-images/ap2.jpg)
அப்துல் கலாம் பல மேடைகளில் தன்னுடைய அறிவையும், வாழ்க்கை தருணங்களையும் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்வதில் பல விஷயங்கள் இளைஞர்களின் வாழ்க்கைக்கு ஒரு உந்துகோலாக இருக்கும், அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்...
"சூரியனைப் போன்று பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் தன்னை தானே எரித்துக்கொள்ளத் தயாராக வேண்டும்"
"எல்லோருக்கும் சமமான திறமை இருப்பதில்லை, ஆனால் திறமையை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு சமமாக கிடைக்கிறது "
"ஒரு விஷயத்தின் மீதுள்ள பார்வை ஒன்றுதான், ஆனால் சிந்தனை வேறாக இருப்பதுதான் படைப்பாற்றல். தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தால் தோல்வி நம்மை துவண்டுபோகசெய்யாது"
![apj](http://image.nakkheeran.in/cdn/farfuture/9NeS0Ekoz2R27Qpcdc9_hFxDqgdiG9TDN0kibAvKNz4/1533347640/sites/default/files/inline-images/ap1.jpg)
"நீ தோற்றுவிட்டால், அதை விட்டுவிடாதே மீண்டும் முயற்சி செய். தோல்வி என்பது முதல் கட்டம்"
"உங்கள் பணியில் வெற்றி பெற, அதை நோக்கி ஒரு மனதாக இருங்கள்"
"முதல் வெற்றியை அடுத்து ஒய்வு பெறாதே, இரண்டாவது போட்டியில் தோல்வியை கண்டால் முதல்வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்லிவிடுவார்கள்"
"கனவு காணுங்கள், கனவு எண்ணங்களாக மாறும், எண்ணங்கள் செயல்களாக மாற்றம் பெரும்"