வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டதே, மக்களின் பணத்தையும் அரசாங்க பணத்தையும் சேர்த்து வைப்பதற்காகதான் வங்கிகள் உருவாக்காப்பட்டன. அதைத்தொடர்ந்து பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அடிப்படை என்பது சேமிப்பதுதான். தற்போது அதுக்கே ஆபத்து வந்துள்ளது. 2017-2018ம் ஆண்டில் மட்டும் 21,775 கோடி நஷ்டமாகி உள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு வாராக்கடன், மோசடி, போன்றவையும் காரணமாக கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும் இந்த நஷ்டம் நம் தலையில்தான் விடியும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
இந்த நஷ்டத்தில் முதல் இடத்தில் இருப்பது பஞ்சாப் நேஷனல் வங்கி 6,441.13 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பேங்க் ஆப் இந்தியா 2,224.68 கோடியும், பேங்க் ஆப் பரோடா 1,928.25, அலகாபாத் வங்கி 1,520.37 கோடியும், ஆந்திரா வங்கி 1,303.30 கோடியும், யூகோ வங்கி 1,224.64 கோடியும், ஐ.டி.பி.ஐ. வங்கி 1,116.53 கோடியும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 1,095.84 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 1,084.50 கோடியும், பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா 1,029.23 கோடியும், கார்ப்பரேஷன் வங்கி 970.89 கோடியும், யுனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா 880.53 கோடியும், ஓரியென்ட்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் 650.28 கோடியும், சிண்டிகேட் வங்கி 455.05 கோடியும், கனரா வங்கி 190.77 கோடியும், பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி 90.01 கோடியும், தேனா வங்கி 89.25 கோடியும், விஜயா வங்கி 28.58 கோடியும், இந்தியன் வங்கி 24.23 கோடி நட்டத்தையும் அடைந்துள்ளன.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது விஜய் மல்லையா, நீரவ் மோடி, கனிஷ்க், போன்ற பெரும் மோசடி அதிபர்கள்தான், அதுத்தவிர வாராக்கடன், இலட்சத்தில் ஏற்பட்ட பல நஷ்டங்கள் போன்றவை இதெல்லாம்தான் இந்த நஷ்டத்திற்கு காரணம். இவைகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.