Skip to main content

ஈரோட்டில் ஆவி நடமாட்டமா?-அதிரவைத்த சிசிடிவி காட்சி!! 

Published on 13/06/2020 | Edited on 14/06/2020
INCIDENT IN ERODE

 

சினிமாக்களில் தான் பேய் வருவதும், ஆவி நடமாடுவதும் திகிலூட்டும் பட காட்சியாக எடுக்கப்பட்டு அது பரபரப்பாக திரையில் ஒடும். அதுவே நிஜத்தில் நடந்ததாக எந்த ஆய்வும் கண்டுபிடிக்கப்படவில்லை. விஞ்ஞான உலகில் ஏராளமான கட்டுக்கதைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் ஆவி... பேய் என்ற நம்பிக்கைகளும் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.


அப்படித்தான் ஈரோட்டில் கிளம்பியுள்ளது இந்த ஆவியும். ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் காவேரி ஆறு மேம்பாலம், ஈரோடு கருங்கல்பாளையம், நாமக்கல் மாவட்ட எல்லையான பள்ளிபாளையம் இடையில் உள்ளது. இங்கு ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இதில் சி.சி.டி.வி.கேமரா மூலம் வாகனங்கள் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

இந்தநிலையில் சென்ற இரு நாட்களுக்கு முன்பு சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த காட்சியின் நேரம் பகல் ஒரு மணி இரு சக்கர வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தது. அப்போது ஒரு இடத்தில் திடீரென ஒரு ஒளி அது வெள்ளை உருவம் அந்த ஒளி உருவம் நடு சாலையில் அந்த மேம்பாலத்தில் வேகமாக செல்கிறது பிறகு இடதுபுறம் சென்றும், தொடர்ந்து வலது புறம் சென்று பிறகு ரோட்டில் நேராக சென்று விடுகிறது.

 

 


இந்த காட்சிகளை கண்ட போலீசாருக்கு திகிலும் பயமும் ஒரு சேர ஏற்பட்டு ஐயோ ஆவிதான் இப்படி நடுரோட்டில் போகிறது என போலீசார் பீதியை கிளப்ப, மற்றொருவர் இங்கு 100 அடி தூரத்தில் இரண்டு சுடுகாடுகள் உள்ளது. அந்த சுடுகாட்டிலிருந்துதான் இந்த ஆவி வந்திருக்கிறது என அவர் பங்குக்கு கூறியிருக்கிறார். இந்த காட்சிகளை வாட்ஸ் அப் முலம் வெளியே அனுப்ப பொதுமக்கள் மத்தியில் ஆவி நடமாட்டம் என்ற பய பீதி ஏகத்திற்கும் பரவியது.

பள்ளிபாளையம் காவேரி பாலத்தில் பாத்து போங்கப்பா ஆவி சுத்திகிட்டு இருக்குது என பொதுமக்களில் சிலர் அட்வைஸ்சும் கொடுக்க ஆரம்பித்தனர். சரி அந்த உருவம் எப்படி வந்தது என தொழிழ்நுட்ப பிரிவை சேர்ந்த கம்யூட்டர் எஞ்சினியர்கள் ஆய்வு செய்தபோதுதான், அது ஆவியும், இல்லை பேயும் இல்லை. கேமராவில் ஏற்பட்ட அலைனிங் பிரச்சனை என்பது தெரியவந்தது. இதுபோன்ற தொழில்நுட்ப குறைபாடுகள் ஏற்படும்போது கேமரா வெளிச்சம் காட்சிகளில் பதிவாகும் அப்படித்தான் இதுவும் என்பதை கண்டுபிடித்தனர்.

 

ஆனாலும் என்னதான் ஆய்வுபூர்வமாக எடுத்துச் சொன்னாலும் பரவிய பீதி குறையாமல் கரோனாவோடு மட்டுமல்ல, நாங்கள் பேய், ஆவியோடும் வாழப் பழகிக் கொண்டோம் என்கிறார்கள் காவேரி பாலத்தில் பயணம் செய்யும் பள்ளிபாளையம், ஈரோடு மக்கள்.

 

சார்ந்த செய்திகள்