![yogibabu join in sivakarthikeyan maaveeran movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/dEEv4lLgcJELEteQIYFAn45iNszpUkMPFtMnOeBFSG0/1659620123/sites/default/files/inline-images/363_2.jpg)
'டான்' படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதையடுத்து 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கும் ’மாவீரன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க அனுபவ நடிகை சரிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கிவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 'மாவீரன்' படக்குழு, படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நடிகர் நடிகைகளை அடுத்தடுத்த வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் மிஷ்கின் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்த படக்குழு தற்போது மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி யோகிபாபு இப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.
We are delighted to welcome @iYogiBabu onboard for #Maaveeran / #Mahaveerudu 💐@Siva_Kartikeyan @AditiShankarofl @madonneashwin @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @Kumar_gangappan @DoneChannel1 pic.twitter.com/Rja8XDJquq— Shanthi Talkies (@ShanthiTalkies) August 4, 2022