Skip to main content

யோகி பாபு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

Yogi Babu 'pannikutty' movie Release date announced

 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து கொண்டு வருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் 'ஏ1', 'பாரீஸ் ஜெயராஜ்', போன்ற படங்களை இயக்கிய ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே 'கிருமி' படத்தை இயக்கிய அனுசரண் இயக்கும் ‘பன்னிகுட்டி’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். திண்டுக்கல் ஐ. லியோனி, கருணாகரன் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'லைகா ப்ரோடக்ஷன்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ளார். 

 

இந்நிலையில் ‘பன்னிகுட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஜூலை 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளத்தில் தெரிவித்து புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்