![yogibabu](http://image.nakkheeran.in/cdn/farfuture/ij0i5lQpA9UREXpVnSB20dYOMmr7fPr1e35Blt5xybA/1544616050/sites/default/files/inline-images/mo_1.jpg)
திரில்லர் படங்களில் உலக மக்களை வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் ஜாம்பி .திரில்லராகவும் காமடியாகவும் மக்கள் அனைவரையும் ரசிக்கவைத்தது. பிற்காலத்தில் ஜாம்பி காமடி படங்கள் சர்வதேச அளவில் பனோரமாவிலும் திரை உலகிலும் மிகவும் போற்றப்பட்டது. இந்த ஜாம்பியை வைத்து முதன் முறையாக தமிழில் படத்தை தற்போது தயாரிக்கிறார்கள். அதற்கு "ஜாம்பி"என்றே பெயரிட்டுள்ளார்கள். 'எஸ்3' பிக்சரஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம், வி.முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை 'மோ' பட இயக்குனர் புவன் நல்லான்.ஆர் இயக்குகிறார்.
ஒரே இரவில் நடக்கும் ஹாரர் - காமடியாக உருவாகும் இப்படத்தில் யோகி பாபு , 'பிக்பாஸ்' புகழ் யாஷிகா ஆனந்த் இருவரும் பரபரப்பான கேரக்டர்களில் நடிக்கிறார்கள் . யூ ட்யூப் 'பரிதாபங்கள்' புகழ் கோபி, சுதாகர் இப்படம் மூலம் முக்கிய நடிகர்களாக அறிமுகமாகிறார்கள். ஆஸ்கர் விருது பெற்ற 'லைஃப் ஆஃப் பை' படத்தில் நடித்த டி.எம்.கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் மனோபாலா, 'கோலமாவு கோகிலா' அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், 'மியூசிக்கலி' புகழ் சித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 'பார்ட்டி' படத்திற்கு பிறகு பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். வரும் டிசம்பர் 13ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறவுள்ளது.