![yash celebrated kgf 2 success](http://image.nakkheeran.in/cdn/farfuture/2tqdRPHyfaNY-iBHgxjq_7SWzL3BEnbCUMon8tfTfd4/1650876065/sites/default/files/inline-images/378_1.jpg)
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் இப்படம் வசூல் ரீதியாக பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில் படத்தின் வெற்றியை நடிகர் யாஷ், இயக்குநர் பிரசாந்த் நீல், மற்றும் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து "இது ஆரம்பம்தான்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.