Published on 01/06/2020 | Edited on 01/06/2020
![wajid khan](http://image.nakkheeran.in/cdn/farfuture/5uygItCzxaZDR-L4l2LxawHgpvfoJUz-bk3RHkxrHcg/1590983431/sites/default/files/inline-images/wajid%20khan.jpg)
பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரும், சல்மான் கானின் ஆஸ்தான இசையமைப்பாளருமான வாஜித் கான் காலமானார்.
பிரபல தபேலா கலைஞர் உஸ்தாத் ஷராஃபத் அலிகானின் இரு மகன்களில் ஒருவரான இவர் , ‘தபாங்’, ‘ஏக் தா டைகர்’, ‘வான்டட்’ உள்ளிட்ட பல படங்களுக்கு தனது சகோதரருடன் இணைந்து இசையமைத்துள்ளனர்.
1998ஆம் ஆண்டு சல்மான்கான் நடித்த ‘பியார் கியா தோ தர்ணா க்யா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் இசையமைப்பாளர்களாக அறிமுகமான சாஜித்- வாஜித் சகோதரர்கள் அதன்பிறகு சல்மான்கானின் ஆஸ்தான இசையமைப்பாளர்களாக விளங்கினர்.
இந்நிலையில் சாஜித்- வாஜித் சகோதரர்களில் ஒருவரான வாஜித் கான் இன்று (ஜூன் 1) உடல்நலக் குறைவால் காலமானார். வாஜித் கானின் மறைவிற்கு பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.