![vdgbdsbv](http://image.nakkheeran.in/cdn/farfuture/LZ0htQI3l1ilmQf5-4sAlEdwgwMVSjul5HCTf_FGWo8/1613985373/sites/default/files/inline-images/ee34aa54-5432-4d5c-a8da-b30c691f9016.jpg)
‘பில்லா’, ‘ஆரம்பம்’ பட இயக்குநர் விஷ்ணு வர்தன் பாலிவுட்டில் ‘ஷெர்ஷா’ படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். கார்கில் போரில் கலந்துகொண்டு பரம்வீர் சக்ரா விருதுபெற்ற ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். கரோனா பொதுமுடக்கத்தால் மற்ற பெரிய படங்கள் போலவே, 2020ஆம் ஆண்டிலிருந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
![hrhfsd](http://image.nakkheeran.in/cdn/farfuture/zSyp1eLfJo8y6K3gpO_8OxCDUTV8Tf7kKnCSUH1AfCI/1613998625/sites/default/files/inline-images/dcf2aafc-5d49-476c-9ad8-5109b8d543c6_0.jpg)
தற்போது ஜூலை 2, 2021 அன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் கரண் ஜோகர் இப்படத்தினை தயாரிக்க, காஷ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.