Published on 22/03/2021 | Edited on 22/03/2021
![vishnu vishal](http://image.nakkheeran.in/cdn/farfuture/zT-aYOZAUJYWOFa_V24-Mqhgpf-SXQ1PKVEg1_LmEvI/1616397721/sites/default/files/inline-images/75_13.jpg)
நடிகர் விஷ்ணு விஷாலும் பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள காடன் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஜ்வாலா குட்டாவும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் தன்னுடைய திருமணம் குறித்துப் பேசிய விஷ்ணு விஷால், "நாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளோம். நான் தெலுங்கு மருமகனாகப்போகிறேன். இது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" எனக் கூறினார்.