
சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த சூழலில் இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் இரண்டு படக்குழுவினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா படப்பிடிப்பு தள காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். பின்பு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சிவகார்த்திகேயன் நடித்த படங்களை வைத்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டிருந்தது.
அதே போல் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது. மதராஸி என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பராசக்தி - மதராஸி இரண்டு படக்குழுவும் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து பட அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. பராசக்தி படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதே சமயம் மதராஸி படக்குழு செக்ண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இரண்டு போஸ்டர்களும் தற்போது வைரலாகி வருகிறது.