Skip to main content

விஷால் நிறுவன பணம் கையாடல் வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

vishal

 

விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் கணக்காளர் ரம்யா மீது பணம் கையாடல் தொடர்பாக அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் கொடுத்த புகாரை விரைந்து முடிக்க காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

ad

 

கணக்காளர் ரம்யா என்பவர் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணியில் இருந்தபோது பண கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் புகார் ஒன்றினை காவல்துறையிடம் அளித்தார். அப்புகாரின் பெயரில் முதல் குற்றப்பத்திரிகை பதிவு செய்த பின்னரும் பல மாதங்களாக எந்த ஒரு விசாரணையும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், மேலாளர் ஹரிகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையை விரைந்து முடிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார் 6 மாதத்திற்குள் இந்த வழக்கை விசாரித்த முடிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்