Published on 11/01/2021 | Edited on 11/01/2021
![kamal hassan](http://image.nakkheeran.in/cdn/farfuture/0YBaLbw6HCx3NQkheab9dl0Bp3RGy6Pjn_7Dwguuv-g/1610361839/sites/default/files/inline-images/1_319.jpg)
கமல்ஹாசன் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான படம் 'விருமாண்டி'. கமல், பசுபதி, நாசர், நெப்போலியன் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருந்த இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
வரும் ஜனவரி 14-ஆம் தேதி விருமாண்டி படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனையொட்டி, வரும் பொங்கல் தினத்தன்று விருமாண்டி படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், படம் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான இந்த வீடியோவை ரசிகர்கள் உற்சாகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.