![kerala film industry strike update](http://image.nakkheeran.in/cdn/farfuture/PviWAMxSUvFDypYyRhuJn6WsSeysLZ14acCHB93tEVg/1738926336/sites/default/files/inline-images/274_21.jpg)
கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், கேரள திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு மலையாள திரைப்படத் துறை அமைப்புகள் சார்ந்த ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மலையாள சினிமா சந்தித்து வரும் நிதி இழப்பு, கதாநாயகர்களின் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது. இறுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கேரள திரைப்பட அவைத் தலைவர் சுரேஷ் குமார் பேசுகையில், “நாங்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறோம். இதே நிலைமை தொடர்ந்தால், தயாரிப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எனவே ஜூன் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அதே போல் அன்று முதல் படப்பிடிப்பும், ஒளிபரப்பும் நிறுத்தப்படும். நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இயக்குநர்களின் சம்பளம் அதிகமாக உள்ளது.
மேலும் ஒவ்வொரு படமும் ஓ.டி.டிக்கு விற்கப்படுவதில்லை. ஒரு படத்தைத் தயாரிப்பதற்கும், படத்தை வினியோகம் செய்வதற்கும் அதிக செலவு ஏற்படுகிறது. மாநில அரசும் இரட்டை வரிவிதிப்பு மற்றும் பிற செலவுகளைக் குறைத்து மாநில அரசும் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.