Published on 09/06/2018 | Edited on 10/06/2018
![vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/lf-31U72EtHqy8F9ImYSr0ScB-RxOTPB5p8bqprU7GA/1533347624/sites/default/files/inline-images/DfEdixtUYAEhaij.jpg)
விஜய்யின் 62ஆம் படத்தை தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தற்போது நடந்துகொண்டிருக்கும் அரசியலை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் அரசியல்வாதியாக வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகிறார். மேலும் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகிய இருவரும் பெரிய அரசியல் தலைவர்களாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படப்பிடிப்புத் தளத்தில் பேண்ட் செட் வாத்தியக்காரர்களுடன் இணைந்து இசைக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. மேலும் அந்த வீடியோவின் பின்னணியில் பழ.கருப்பையாவை வரவேற்பது போன்ற பிளக்ஸ் போர்டுகளும், அரசியல் கொடிகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய அரசியல் படமாக இருக்கும் என்பதை இந்த காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்த நிலையில் தற்போது படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்ல இருக்கிறது. மேலும் மொத்த படப்பிடிப்பையும் ஜூலை மாத இறுதிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.