ரஜினி, அஜித் இருவரும் நடித்த படங்கள் மோதியதைபோல சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியும் நடித்த படங்கள் மோதவுள்ளன.
![siva vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/XrUswM2QAP_nq41GJk3NTHc5hKnmIPqOKDo0TZ-bDc0/1555915545/sites/default/files/inline-images/siva-vijay-sethupathi.jpg)
ரஜினி - கமல், விஜய் - அஜித், சூர்யா - விக்ரம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். யாருடைய ஹீரோ கெத்து என்று வெளியில் காட்டிக்கொள்ள சரியான தருணமாக அதை கருதி செயல்படுவார்கள். அதைபோல வசூலும் நன்றாக இருக்கும். இந்த வரிசையில் தற்போது போட்டியுடன் இருப்பவர்கள் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி.
முதன் முதலில் சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியும் எதிர்நீச்சல், சூது கவ்வும் ஆகிய திரைப்படங்கள் வழியாக மோதிக்கொண்டனர். அதனை தொடர்ந்து 2016ஆம் ஆண்டில் ரெமோ மற்றும் றெக்கை ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இவர்களின் ரைவல்ரி இப்படி ரசிகர்களிடம் இருந்தாலும் பேட்டிகளில் இரு ஹீரோக்களும், எங்களை ஒப்பிட வேண்டாம் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வார்கள்.
தற்போது மே 16-ம் தேதி அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'சிந்துபாத்' வெளியாகவுள்ளது. அதே போல் மே 17-ம் தேதி ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'Mr.லோக்கல்' வெளியாகவுள்ளது.
மீண்டும் மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் மோதிக்கொள்ள உள்ளனர். இரு படங்களுக்கும் பலத்த எதிர்பார்ப்புகள் இருப்பதால் மீண்டும் விஸ்வாசம் பேட்ட போன்று டபுள் ஹிட் கிடைக்குமா என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். முதலில் மே 1ஆம் தேதிதான் mr.லோக்கல் படம் வெளியாவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.