Skip to main content

எனது தந்தையின் கட்சியில் சேரவேண்டாம் - ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

vijay

 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் விஜய். இவர், அரசியல் கட்சி தொடங்கப்போவதாகச் செய்திகள் வெளிவந்தன. 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில்  அரசியல் கட்சியாகப் பதிவு செய்யக் கோரிய விண்ணப்பமும் வெளியானது. ஆனால், இந்தத் தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே, விஜய்யின் செய்தித் தொடர்பாளர், இந்தச் செய்தியை மறுத்தார்.

 

இந்தநிலையில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், "விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி தொடங்குவது தன்னுடைய முயற்சி எனவும், இதற்கும் விஜய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்றும் கூறியுள்ளர். மேலும், "விஜய் தனது இயக்கத்தில் இணைவாரா என்பது எதிர்காலத்தில் தான் தெரியும் எனவும் கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் பெயரில் தொடங்கப்படும் இயக்கத்திற்கும், விஜய்க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது விஜய்யின் ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் விஜய், இந்தக் குழப்பத்திற்கு விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

விஜய் அந்த அறிக்கையில், "தனக்கும், தன் தந்தை ஆரம்பித்த இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று கூறியுள்ளார். மேலும், விஜய் அந்த அறிக்கையில், "எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ, கட்சிப் பணியாற்றவோ வேண்டாம்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், "எனது பெயரையோ, புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனவும் விஜய் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார் . 

 

                    

                   

சார்ந்த செய்திகள்