![vijay goat 4th single update](http://image.nakkheeran.in/cdn/farfuture/5DJlN6JWS50364XsEnRychhKCb1a-cQ_L4ax5EfwpaM/1725027090/sites/default/files/inline-images/479_11.jpg)
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் ஏஐ தொழில் நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்த் நடித்துள்ளார். தணிக்கை குழுவில் யு.ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இப்படத்திலிருந்து இதுவரை ‘விசில் போடு...’,‘சின்ன சின்ன கண்கள்...’,‘ஸ்பார்க்...’ ஆகிய பாடகள் வெளியாகியுள்ளது. இப்பாடல்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் விஜய் பிறந்தநாளான கடந்த ஜூலை 22ஆம் தேதி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோவும் கடந்த 17ஆம் தேதி வெளியான ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் நான்காவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ‘மட்ட’ என்ற தலைப்பில் நாளை (31.08.2024) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக புது போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இப்பாடல் தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘மச்சி கெடா மஞ்ச சட்ட.. மம்டி வரான் பள்ளம் வெட்ட... மட்ட மட்ட ராஜ மட்ட... எங்க வந்து யாரு கிட்ட’ என்ற பாடலின் வரிகளை பதிவிட்டுள்ளார்.