![beast movie realease april13](http://image.nakkheeran.in/cdn/farfuture/SVt3vftMzy4djHl3JXoO6JcvoV3S7rEBY7t9DlaUBTo/1647929661/sites/default/files/inline-images/374_1.jpg)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிமிக்கானா பாடலால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீஸ்ட் படத்திற்கு தணிக்கை குழு யு/ ஏ சான்று அளித்துள்ளது. இதனிடையே இந்த முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் சினிமா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.