![vijay antony tweet about bikili pichaikkaran 2 movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/sNqjE1U2pLVdNlIHRRq98Zpsilzx_bGXWxPgWpxGP8Q/1647436810/sites/default/files/inline-images/314_6.jpg)
சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி விஜய் ஆண்டனி இயக்கியும் வருகிறார்.
சமீபத்தில் சமூக வலைதளம் முழுவதும் "பிகிலி யோட எதிரி யாரு" என்ற போஸ்டர் வைரலாகி வந்தது. இது யாருடைய போஸ்டர் எந்த படத்தை பற்றிய போஸ்டர் என எந்த தகவலும் தெரியாததால் பலரும் குழப்பத்தில் இருந்த நிலையில், அந்த போஸ்டர் 'பிச்சைக்காரன் 2' படத்துடையது என்றும், அந்த ஆண்டி பிகிலி நான் தான் என்றும் விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார். கூடவே பிச்சைக்காரன் 2' படத்துல வர்ற 'ஆன்டிபிகிலி' நான்தான், அப்போ பிகிலி யாரு என கேள்வி எழுப்பி மறுபடியும் ரசிகர்களை குழப்பினார்.
இந்நிலையில் 'பிச்சைக்காரன் 2 படத்தின் தீம் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கனவே வெளியான பிச்சைக்காரன் படத்தில் இடம் பெற்றது போல பணக்காரனாக இருக்கும் விஜய் ஆண்டனி அம்மாவுக்காக 48 நாள் பிச்சைகாரனாக மாறுவார். அதே போன்று இப்படத்திலும் பணக்காரனாக இருக்கும் விஜய் ஆண்டனி ஏதோ ஒரு காரணத்திற்காக பிச்சைக்காரனாக மாற உள்ளார் என தெரிகிறது. மேலும் இதில் பணக்கார கதாபாத்திரத்தில் வரும் விஜய் ஆண்டனி ஆண்டி பிகிலி என்றும் பிச்சைக்கார கதாபாத்திரத்தில் வரும் விஜய் ஆண்டனி பிகிலி என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலுடன் நான் 'பிகிலி'ன்னு யார சொல்றேன்னு புரியுதா? எனக் கேட்டு குழப்பத்திற்கு முடிவு கட்டியுள்ளார்.
நான் #BIKILI -ன்னு யார சொல்றேன்னு புரியுதா?
(Tamil)https://t.co/FfDjNNkyya
నేను #BIKILI అని ఎవర్ని ఉద్దేశించి అంటున్నానో అర్ధమౌతందా?
(Telugu)https://t.co/Z2q7sL4OGw@antibikili @mrsvijayantony @vijayantonyfilm @leojohnpaultw @DoneChannel1 @gobeatroute pic.twitter.com/1PRxWCZcti— vijayantony (@vijayantony) March 16, 2022