Skip to main content

வரலாறு திரும்புகிறது... 'மாநாடு'க்கு நடந்தது 'மன்மதலீலை'க்கு நடக்குமா?

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 

venkat prabhu tweet manmathaleelai movie

 

'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு ‘மன்மதலீலை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அசோக்செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். பிரேம் ஜி இசையமைத்துள்ள இப்படத்தை ராக்ஃபோர்ட் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.  ஏற்கனவே வெளியான இப்படத்தின் க்ளிம்பஸ் மற்றும் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. ரொமான்டிக் ட்ராமா படமாக உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 1(இன்று) ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

 

இதனிடையே 'இரண்டாம் குத்து' படத்தின் விநியோக உரிமை தொகையில் ரூ. 2 கோடியை பாக்கி வைத்து விட்டு ராக்ஃபோர்ட் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் 'மன்மதலீலை' படத்தை தயாரித்து உள்ளதாகவும், மீதமுள்ள தொகையை வழங்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் ப்ளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மன்மத லீலை படத்தை நிபந்தனையுடன் வெளியிட உத்தரவிட்டார். இதனால் சொன்ன தேதியில் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்ததை தொடர்ந்து காலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கூடினர், ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டது.இந்நிலையில் அனைத்து பிரச்சனைகளும்  சரி செய்யப்பட்டதை தொடர்ந்து 'மன்மதலீலை' படம் தற்போது வெளியாகியுள்ளது. 

 

ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கி இருந்த 'மாநாடு' படம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்த பின்பு வெளியாகி பெரும் பெரும் வெற்றியை பெற்றது. இதே போன்ற 'மன்மதலீலை' படமும் வெளியாவதற்கு முன்பு பல பிரச்சனைகளை சந்தித்துள்ள நிலையில் மன்மதலீலை படமும் பெரும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனிடையே இயக்குநர் வெங்கட் பிரபு வரலாறு திரும்புகிறது என்று கூறி காலை ஷோ ரத்தானதற்கு மன்னிக்கவும் என டீவ்ட் செய்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்