![Veeramae Vaagai Soodum theme music released](http://image.nakkheeran.in/cdn/farfuture/7eXJUoXBBp3uMMPMBCF7kGD3kHKzLpjjtxQYZi9Alj4/1640174972/sites/default/files/inline-images/veerame.jpg)
‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால் நடித்துவருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். யோகிபாபு, பி.என்.ஆர். மனோகர், கவிதா, மரியம் ஜார்ஜ், தீப்தி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/W95S_QDoG0GKzMAqE_uH81UuVuErZb0ypkUXgoXL9DM/1640175001/sites/default/files/inline-images/AVV-article-inside-ad_17.jpg)
இந்நிலையில் வீரமே வாகை சூடும் படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் நிவேதிதா குரலில் வெளியாகியுள்ள இந்த தீம் பாடல் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.