![vanangaan dubbing work start](http://image.nakkheeran.in/cdn/farfuture/g8YJQ5mXYTWnNhlu9tzgMnR026iYtg_Oay63HA8Ra_k/1702886205/sites/default/files/inline-images/194_24.jpg)
பாலா தற்போது இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இதில் முன்பு சூர்யா கமிட்டாகி நடித்த வந்த நிலையில் சில காரணங்களால் விலகிவிட்டார். மேலும் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவரும் விலகிவிட்டார். இதையடுத்து சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து பாலா இயக்கி வந்தார். கன்னியாகுமரியில் படப்பிடிப்பு தொடங்கி, பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது.
இப்படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அதில் அருண் விஜய் சேரும் சகதியுமாக ஒரு கையில் பெரியார் சிலையுடனும் மறு கையில் பிள்ளையார் சிலையுடனும் இடம்பெற்றிருந்தார். அந்த போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், இப்படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. பூஜையுடன் டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. பூஜை விழாவில் பாலா, சுரேஷ் காமாட்சி, மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.