Skip to main content

கலைஞர் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய வைரமுத்து

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

vairamuthu about kalaignar

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாக கொண்டாட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் ஜூன் 3ல் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற உள்ளது. இவ்விழாவை இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கொண்டாடுவோம் என சமீபத்தில் நடந்த அக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

கலைஞரின் 100வது பிறந்தநாளுக்கு வெகு நாட்களே உள்ள நிலையில் கலைஞர் குறித்த நினைவுகளைப் பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "என் வாழ்வின் மகிழ்வான தருணங்களுள் ஒன்று கலைஞரின் பேனாவைக் கலைஞரிடம் கேட்டுப் பெற்றது. கலைஞர் நூற்றாண்டுக்கு அதுவே கவிதையாகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கலைஞரை நேரில் சந்தித்த அனுபவம் குறித்தும் அவரிடம் பரிசாகப் பெற்ற பேனா குறித்தும் ஒரு கவிதையாகச் சொல்லி நெகிழ்ச்சியடைந்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்