![danush](http://image.nakkheeran.in/cdn/farfuture/HEPhDJRtNiZ40sV_mZU9SwfznuR-OhjJ7iayIktOnzo/1533347624/sites/default/files/inline-images/DfqSHzEVQAANN2z.jpg)
விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் 'வட சென்னை'. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28 ஆம் தேதி தனுஷ் பிறந்தநாள் அன்று வெளியிடுவதாக படக்குழு தற்போது அறிவித்து தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதையடுத்து படத்தை செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. கேங்க்ஸ்டர் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் 'வட சென்னை'. மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.