Published on 11/11/2019 | Edited on 11/11/2019
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.
![mani](http://image.nakkheeran.in/cdn/farfuture/Yeqoi6Lk61-_Icuy0Vv8y2bWtaxmBHiLC__jj__3iMU/1573472779/sites/default/files/inline-images/EJFr5_iU4AAo-9h.jpg)
குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் உட்பட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை மணிரத்னத்தின் சிஷ்யன் தனா இயக்கியுள்ளார். மேலும் படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிந்து வரும் 2020 ஜனவரியில் இப்படம் வெளியாகவுள்ளது.