![tovino thomas 2018 movie ott release update](http://image.nakkheeran.in/cdn/farfuture/NbACTGpDTdLWLs0nukqCpt3z41ceGCOvyvnjyQrkE20/1685364252/sites/default/files/inline-images/52_62.jpg)
மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள '2018' படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக படக்குழு குறிப்பிடப்பட்டிருந்தது. கேரளாவில் வெள்ளம் வந்த போது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து விரிவாக படத்தில் பேசப்பட்டிருக்கிறது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.156 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற பெருமையும் பெற்றுள்ளதாக பேசப்படுகிறது. மலையாளத்தை தொடர்ந்து சமீபத்தில் இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஜூன் 7ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை சோனி ஓடிடி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் ஒரு புதிய ட்ரைலரையும் பகிர்ந்துள்ளது.
ഒന്നിച്ച് കരകയറിയ ഒരു ദുരന്തത്തിൻ്റെ കഥ!
The biggest blockbuster Mollywood has ever seen is now coming to Sony LIV
2018, streaming on Sony LIV from June 7th#SonyLIV #2018OnSonyLIV #BiggestBlockbuster #BasedOnTrueStory
@ttovino #JudeAnthanyJoseph @Aparnabala2 #kavyafilmcompany pic.twitter.com/9UzcYSPz1j— Sony LIV (@SonyLIV) May 29, 2023