Published on 17/06/2021 | Edited on 17/06/2021

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை எடுத்துவந்த பிரபல நடிகர் ஷமன் மித்ரு மரணமடைந்தார். அவருக்கு வயது 43.
சில நாட்களுக்கு முன்பு ஷமன் மித்ருவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவர், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான தொரட்டி படத்தில் நாயகனாக நடித்திருந்தார். ஷமன் மித்ரு மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.