
சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வடிவேலுவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுந்தர் சியின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து வழங்குகிறது. இப்படத்தில் கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடித்திருக்க முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ள இப்படம் வருகிற 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியான நிலையில் அடுத்ததாக ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்து பேசினர். அந்த வகையில், “நானும் சுந்தர் சி-யும் 15 வருஷமா சேரல. யார் பிரிச்சு வச்சான்னு தெரியல. அது சரி... பிரிச்சு வைக்க ஆளா இல்ல நாட்டுல. நம்ம ஆளுகளுக்கு அவ்வளவு திறமை இருக்கு. இரண்டு சைடும் பால் போடுவாங்க. இத்தனை வருஷம் நாங்க பிரிஞ்சது, அவ்வளவு பெரிசா தெரியல. நேத்து படம் பண்ண மாதிரி இருக்கு. வின்னர் படம் மாதிரி இந்த படத்தில் சேர்ந்திருக்கோம். மீம் கிரியேட்டர்களுக்கு ஏகப்பட்ட தீனி இந்த படத்துல இருக்கு. எல்லாரும் குடும்பத்தோட இந்த படத்தை பார்க்கனும். ஒரு தடவைக்கு பத்து தடவ கண்ணை விரிச்சு வச்சு பார்ப்பீங்க” என்றார்.
சுந்தர்.சி மற்றும் வடிவேலு கூட்டணியில் ‘கிரி, ‘வின்னர்’, ‘லண்டன்’, ‘ரெண்டு’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘நகரம் மறுபக்கம்’ படம் வெளியாகியிருந்தது. அதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படம் வெளியாகிறது.