![therukural arivu introduce his lover](http://image.nakkheeran.in/cdn/farfuture/er6njNjMlW0ctZPzV0ami5YXC0x3HVHb37WZDqxeY-4/1670058929/sites/default/files/inline-images/133_18.jpg)
ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான 'காலா' படத்தில் 'உரிமையை மீட்போம்' பாடலை எழுதியதன் மூலம் அறிமுகமான தெருக்குரல் அறிவு, விஜய்யின் 'மாஸ்டர்' பட 'வாத்தி ரெய்டு' பாடலின் மூலம் பிரபலமானார். இதனிடையே தனுஷ், ஜீவா உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்களில் பாடகராவும் எழுத்தாளராகவும் பயணித்துள்ளார். இது போக பல ஆல்பம் பாடல்களை பாடியுள்ள அறிவு, கடந்த ஆண்டு வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி' ஆல்பம் பாடல் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார்.
இந்த ஆல்பம் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு நிறைய நிகழ்ச்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. அந்த வகையில் கடந்த ஜூலையில் நடைபெற்ற சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில் இப்பாடல் அரங்கேற்றப்பட்டது. ஆனால், அப்போது தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை என சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை தொடர்பாக சந்தோஷ் நாராயணன், தீ மற்றும் அறிவுக்கும் சில பிரச்சனைகள் நடந்தது. பின்னர் இந்தப் பாடலின் மூலம் பெரிய அளவில் கவனம் பெற்ற அறிவு வெளிநாடுகளிலும் இசைக்கச்சேரியை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தெருக்குரல் அறிவு, தற்போது தான் காதலித்து வருவதாகவும், அவர் யார் என்பதையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "என் திமிரான தமிழச்சி" எனக் குறிப்பிட்டு கல்பனா அம்பேத்கர் என்ற பெண்ணைக் காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கல்பனா அம்பேத்கர், ஆண்டுதோறும் மார்கழியில் நடந்து வரும் 'மார்கழியில் மக்களிசை' கலைத்திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இக்குழுவை இயக்குநர் பா.ரஞ்சித் அவரது நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பாக வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.