Skip to main content

'தீராக் காதல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Theera kaadhal First look

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தீராக் காதல்' எனப் பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

 

அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தீராக் காதல்'. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் ஜி.ஆர். சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா ஜி.கே மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ஜி.ஆர்.சுரேந்தர்நாத் வசனம் எழுத, டி. உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ்  நிறுவனம் தயாரித்திருக்கிறது.

 

இந்த திரைப்படத்தின்  இறுதிக் கட்டப் பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் தலைப்பும்,  தோற்றமும், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதும் ரசிகர்களை  வெகுவாக கவர்ந்திருக்கிறது.

 


 

சார்ந்த செய்திகள்