Skip to main content

ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த ‘குட் பேட் அக்லி’

Published on 15/04/2025 | Edited on 15/04/2025
good bad ugly joins rs.100 crore club

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 10ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் அஜித் ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து உணர்ச்சி பொங்க ரிவ்யூ கொடுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.30.9 கோடி வசூலித்தது. இதன் மூலம் இதுவரை வெளியான அஜித் படங்களின் வரிசையில் இப்படம் தான் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது. 

படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது ஆதிக் ரவிச்சந்திரன், “படம் வெளியான பிறகு அஜித் சாரிடம் பேசிய போது படம் ஹிட்டாகிவிட்டது. வெற்றியை தலையில் ஏற்றிக்கொள்ளாதே, தோல்வியை வீட்டிற்கு எடுத்து செல்லாதே, அடுத்த பணியை தொடர் வேண்டும் என்றார். அவருக்கு என் நன்றி” என நெகிழ்ச்சியுடன் பேசினார். 

இந்த நிலையில் இப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தமிழக விநியோகஸ்தரான தயாரிப்பாளர் ராகுல் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டில் மட்டும் ஈட்டப்பட்ட வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. 5 நாளில் ரூ.100 கோடி கிளப்பில் இப்படம் இணைந்துள்ளதால் படக்குழுவும் அஜித் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

சார்ந்த செய்திகள்