Skip to main content

“திரைப்படங்கள் தவிர்த்து சம்பாதிக்கும் பணத்தை சமூகத்துக்கு வழங்குகிறேன்” - தமன்

Published on 22/01/2025 | Edited on 22/01/2025
thaman about his philanthropy work

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். கடைசியாக தமிழில் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த ரசவாதி மற்றும் தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேம் சேஞ்ஜர் படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்போது இரண்டு மொழிகள் உள்பட இந்தியையும் சேர்த்து ஐந்திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

திரைப்படங்களுக்கு நடுவே அவ்வப்போது கச்சேரி நடத்தி வரும் தமன் அடுத்ததாக என்.டி.ஆர். அறக்கட்டளை சார்பில் நடக்கும் இசைக் கச்சேரியை நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சி விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி முனிசிப்பல் இண்டர்நேஷ்னல் ஸ்டேடியத்தில் பிப்ரவரி 15 அன்று நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சில் தலசீமியா நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதையும் மருத்துவ முகாம்களை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இசை கச்சேரி நிகழ்ச்சியை ஒட்டி தமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அவரது தொண்டு பணிகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் திரைப்படங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறேன், மேலும் சி.சி.எல்., இசை கச்சேரிகள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் சம்பாதிப்பதை, தொண்டு நிறுவனங்கள் மூலம் சமூகத்திற்கு வழங்குகிறேன்” என்றார்.

சார்ந்த செய்திகள்