தெலுங்கில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுகுமார். கடைசியாக அல்லு அர்ஜூனை வைத்து புஷ்பா 2 படத்தை இயக்கினார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் ரூ.1800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்த நிலையில் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். சுகுமார் ஐதராபாத் விமான நிலையத்தில் வந்த போது அவரை அழைத்து சென்றுள்ளனர். பின்பு ஐதராபாத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இருப்பினும், சோதனையின் நோக்கம் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
சமீபத்தில் வாரிசு, கேம் சேஞ்ஜர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.