விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. இப்படம் இரண்டு பாகமாக உருவாகுவதாகவும் முதலில் இரண்டாவது பாகத்தை வெளியிட்டு பின்பு முதல் பாகத்தை வெளியிடலாம் என்ற வித்தியாசமான பிளானில் படக்குழு இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தை ரியா ஷிபு தயாரித்திருக்க எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசர் முன்னதாக வெளியாகியிருந்த நிலையில் பின்பு டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படம் இம்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து அடுத்ததாக எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் மாற்றப்பட்டுள்ளது. இப்படம் வருகிற மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இப்படம் இருக்கும் என தெரிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.