Published on 05/12/2019 | Edited on 05/12/2019
பிகில் படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.
![thalapathy 64](http://image.nakkheeran.in/cdn/farfuture/udvk_reOWPDJ_sT9QcDgNkftGI40RKWSzljIv0WhhyE/1575547303/sites/default/files/inline-images/thalapathy-64-vijay.jpg)
இந்த படம் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவிலுள்ள சிமோகா மாவட்டத்திலுள்ள மத்திய சிறையில் சிறப்பு அனுமதி பெற்று ஷூட் செய்யப்பட இருப்பதாக் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
![iruttu](http://image.nakkheeran.in/cdn/farfuture/CakjBl9EwFPqDsNoDwijkj9snFSNtCbDCB4aX1fhgjI/1575547352/sites/default/files/inline-images/article-inside-ad_17.jpg)
இந்நிலையில் சிவமோகாவிலுள்ள மத்திய சிறையில் தளபதி 64 ஷூட்டிங் தொடங்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 1 முதல் ஜனவரி 18 வரை இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் ஷூட்டிங்கிற்காக, சிறையின் முகப்புக்கு புதிய வண்ணத்தை பூசியுள்ளது படப்பிடிப்புக் குழு.