வருகிற ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருடா வருடம் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் விஜய்யின் தற்போது நடிக்கும் படம் குறித்த அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை அப்டேட் விட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
![thalapathy 63](http://image.nakkheeran.in/cdn/farfuture/4fT3LnomKirT44NNo3SjkaIUPlQURdmGynLdkB0Lpck/1560936815/sites/default/files/inline-images/thalapathy-63.jpg)
நேற்று தளபதி 63 அப்டேட் குறித்து ட்வீட்டில் , “நானும் உங்க கூட சேர்ந்து எப்போதுமே தளபதி பட அப்டேட் எங்க என்று மற்ற தயாரிப்பாளர்களிடம் கேட்பேன் என்பதை நீங்கள் எல்லாம் மறந்துவிட்டீர்கள். தளபதி 63 அப்டேட் சரியான நேரத்தில் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காகதான் 24 மணிநேரமும் கடுமையாக உழைக்கின்றோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தயாரிப்பாளர் அர்ச்சனா மாலை ஆறு மணிக்கு அப்டேட் வருகிறது தயாராக இருங்கள் என்று விஜய் ரசிகர்களுக்கு அலெர்ட் கொடுத்துள்ளார். அந்த ட்வீட்டிற்கு திமுக எம்.எல்.ஏ-வும், சினிமா தயாரிப்பாளருமான ஜே. அன்பழகன் இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்க வைத்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பை பார்க்கையில் இன்று மாலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது டைட்டில் வெளியாக வாய்ப்பிருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.