‘தளபதி 63’ படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். இந்த வருட தீபாவளியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/PYbljCaiahyVniIMbcV__6X1p9RSQC_kEZniI5CngEQ/1555390692/sites/default/files/inline-images/vijay_38.jpg)
தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்திற்காக விஜய் மற்றும் அட்லீ இணைந்துள்ளனர். சென்னையில் இந்த படத்திற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்க்ப்பட்டு பல கோடி செலவில் படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் கதை பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா வில்லு படத்திற்கு பின் நடிக்கிறார். யோகி பாபு, கதிர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நடிகர்களும் இதில் நடிக்கின்றனர்.
![kanchana](http://image.nakkheeran.in/cdn/farfuture/q26pAYIqqA9AFhj8INej4BHf8SUwjtcU21NY6UaPohY/1555417305/sites/default/files/inline-images/kanchana%203%20336x150%20resize_0.jpg)
வழக்கமாக அட்லீ இயக்கிய படங்கள் வெளியான பின்பு பழைய படங்களை காபி செய்துவிட்டார் என்கிற விமர்சனம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்த முறை படம் வெளியாகுவதற்கு முன்பே தளபதி 63 என்னுடைய கதையை வைத்துதான் இயக்குகிறார் என்று ஒரு குறும்பட இயக்குனர் தெரிவித்திருக்கிறார். கே.பி.செல்வம் என்ற அந்த குறும்பட இயக்குனர் பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து ஒரு குறும்படம் இயக்கியுள்ளதாகவும், அதை வைத்து தளபதி 63 கதையை உருவாக்கியிருக்கிறார் என அட்லீ மீது குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக விஜய்யை வைத்து அட்லீ இயக்கிய மெர்சல் படம் மூன்று முகம் படம் போல் இருந்தது என்று அந்த படத்தின் ரீமேக் உரிமத்தை வாங்கியிருந்த தயாரிப்பாளர் குற்றச்சாட்டு வைத்ததாகவும். தற்போதுதான் அந்த பிரச்சனையை சரி செய்து தளபதி 63 பட ஷூட்டிங்கில் பிஸியாக அட்லீ இருக்கிறார். இதுமட்டுமில்லாமல் ஷாரூக் கானை வைத்து ஹிந்தியில் ஒரு படம் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த குறும்பட இயக்குனரின் வழக்கறிஞர் பாலாஜி நம்மிடம் பேசியபோது, இந்த வழக்கிற்கான விசாரணை வருகின்ற 23-04-2019 அன்று 24வது சிவில் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.