Skip to main content

"ஏன் அவுங்க உயிரோட இருக்காங்க" - முதல்வரிடம் கை கூப்பி கோரிக்கை வைத்த தாடி பாலாஜி

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

thadi balaji about thiruthanai issue

 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பறைகளின் இரும்பு கதவுகளின் பூட்டுகளில் மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசியிருந்தனர். மேலும் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியிருந்தனர். இதனை கண்டித்து அங்கிருந்த மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்ப தற்போது நடிகர் தாடி பாலாஜி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்த செய்தியை கேட்கும் போது உடம்பே கூசுது. இதுங்க என்ன ஜென்மம். இதுங்க எல்லாம் ஏன் உயிரோட இருக்காங்கனு புரியவில்லை. நீங்க அந்த பள்ளியில் படிச்சிருக்கலாம். அல்லது உங்க குழந்தை அந்த பள்ளியில் படிக்கலாம். 

 

யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும். குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் இப்படி பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம், 6 அறிவு உள்ளவர்களா இல்லை 5 அறிவு உள்ள மிருகமா. இதெல்லாம் எவ்வளவு கேவலமான விஷயம். எவ்ளோ பெரிய தப்பு. குழந்தைகளுடைய படிப்பு கெடுது. இன்றைய சூழலில் அரசு பள்ளிகள் சிறந்த பள்ளி என்று நிறைய இடத்தில நானே பேசியிருக்கிறேன். கண்கூடாக பார்த்திருக்கிறேன். 

 

முதலில் ஒரே ஒரு விஷயம் நினைச்சிக்கங்க. நம்ம முதல்வர் மு.க ஸ்டாலின், ஒரு குழந்தை சாதிச்சது என்றால், தான் சாதித்தது போல் அக்குழந்தையை அழைத்து கொண்டு பாராட்ட கூடிய நல்ல மனம் கொண்ட மனிதர் அவர். இந்த சூழலில் இப்படி நீங்கள் பண்ணினால் எவ்ளவு கேவலமா இருக்கு. இது எவ்ளோ பெரிய தவறு. நான் முதல் முறையாக தமிழக முதலமைச்சரை கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்துக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இது போன்ற குற்றங்கள் நடக்க கூடாது. அதுவும் உங்க ஆட்சியில் நடக்க கூடாது. 

 

அந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கும், பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும், படிக்கும் குழந்தைகளுக்கும் என்னுடைய சப்போர்ட் எப்போதுமே இருக்கும். விரைவில் அந்த பள்ளிக்கு நேரடியாக வந்து பார்க்கிறேன்" என்றார்.   
 

 

 

சார்ந்த செய்திகள்