![Tamil remake date of the movie that made the world cinema fans emotional has been announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/P1ILnWiXiZ_FwpOnyURSniSOiK7jka0mjxakLTlxdSc/1650716348/sites/default/files/inline-images/Untitled-9_2.jpg)
1997-ஆம் ஆண்டு மஜித் மஜிதி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்'. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த அண்ணன் தங்கை பள்ளயில் படித்து வருகிறார்கள், இருவரும் ஒரே ஷூவை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த கதைக்களத்தை கொண்டு இருவருக்கும் இடையே உள்ள அன்பு, அங்கு நடக்கும் சமுதாய ஏற்றத்தாழ்வு போன்ற பல்வேறு நிகழ்வுகளை மிக அழுத்தமாக சொன்ன இப்படம் 1998-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் அந்த ஆண்டிற்கான சிறந்த சர்வதேச திரைப்படத்தின் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. உலகம் முழுவதும் புகழ் பெற்ற இப்படம் 'அக்கா குருவி' என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகி வந்தது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி மே மாதம் 6-ஆம் தேதி 'அக்கா குருவி' படம் திரையரங்கில் வெளியாகிறது. 'மிருகம்', 'சிந்து சமவெளி' படத்தை இயக்கிய சாமி இப்படத்தை இயக்கியுள்ளார். மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏப்ரல் 25-ஆம் தேதி வெளியாகிறது. உலகம் முழுவது பலரின் வரவேற்பை பெற்ற ஒரு படம் தமிழில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.