Published on 16/07/2022 | Edited on 16/07/2022
![tamanna legend telugu trailer release](http://image.nakkheeran.in/cdn/farfuture/zIeuDizkPLTX7gm8NMkhTPqH-Ae2YBKBaVKM8MOn_eg/1657976737/sites/default/files/inline-images/1296.jpg)
சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தை ஜே.டி - ஜெரி ஆகியோர் இயக்குகின்றனர். இப்படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தெலுங்கு ட்ரைலரை நடிகை தமன்னா வெளியிட்டுள்ளார். இந்த தற்போது தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.