![sushmita sen lalit modi break up](http://image.nakkheeran.in/cdn/farfuture/ToNzp3T_oeb-G7xAlC25fNqJOsJ2SBL_QDAKtxI-RI4/1662469509/sites/default/files/inline-images/1859.jpg)
1994-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென்,தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 46 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல மாடலான ரோஹ்மான் ஷாவ்லுடன் காதல் உறவில் இருந்து வந்தார். ஆனால் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்ததையடுத்து, தான் தத்தெடுத்த இரண்டு குழந்தைகளை வளர்த்து வருகிறார்.
அண்மையில் பெருமளவு வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடியில் சிக்கி லண்டனியில் வசித்து வரும் லலித்மோடி நடிகை சுஷ்மிதா செனுடன் டேட்டிங் செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அத்துடன், “மாலத்தீவு, சார்தானியா உள்ளிட்ட பல இடங்களுக்கு உலக சுற்றுலா சென்றுவிட்டு இப்போதுதான் லண்டனுக்கு திரும்பியுள்ளோம். ஒருவழியாக புது வாழ்க்கையை தொடங்கியுள்ளோம். இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம். கல்யாணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அதுவும் நடக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் லலித் மோடியும், சுஷ்மிதா சென்னும் பிரிந்து விட்டதாக பாலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் லலித் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் சுஷ்மிதா சென்னுடன் இருந்த புகைப்படத்தை நீக்கிவிட்டு தனது புகைப்படத்தை மட்டும் வைத்துள்ளார். மேலும் இவர்கள் காதல் முறிவுக்கு சுஷ்மிதான் சென் தனது முன்னாள் காதலருடன் காட்டி வந்த நெருக்கமே காரணம் என்று பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.