Skip to main content

சூர்யா படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடக்கம்?

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

surya

 

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'சூரரைப் போற்று'. கரோனா நெருக்கடி காரணமாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.  இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா-40' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

முழுவீச்சில் நடைபெற்று வந்த முதற்கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியதையடுத்து, படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்க படக்குழுத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்