![gdsgdsbs](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ih2Exc-A_QgpDOwINCdsKP5MeThX5oJp0ico5JIS1xM/1628489977/sites/default/files/inline-images/first-look-insta-01.jpg)
இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகிவரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான 'ஷீரோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனைப் படத்தின் நாயகியான நடிகை சன்னி லியோன் மற்றும் இயக்குநர் ஸ்ரீஜித் இருவரும் இணைந்து சில தினங்களுக்கு முன் அறிவித்தார்கள். இருவரும் இணைந்து படப்பிடிப்பு நிறைவடைந்தது என்பதைக் குறிப்பிடும் வகையில், கையில் கிளாப் போர்டு ஒன்றை வைத்துக்கொண்டு, அதில் படப்பிடிப்பு நிறைவு என குறிப்பிட்டு, அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
![hhlhlo](http://image.nakkheeran.in/cdn/farfuture/hwX6h-3wE7pNh1_nM83vMKF42_NhS4nMV_p-FucVXPQ/1628490095/sites/default/files/inline-images/39192396_307329609842521_4332558009415761920_n.jpg)
நடிகை சன்னி லியோன் முகத்தில் ரத்த காயங்களோடு முறைக்கும்படி இருக்கும் இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். மூணாறு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும் இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி, கன்னடம், மற்றும் தெலுங்கு ஆகிய பல மொழிகளில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததை அடுத்து இதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.